என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aleksandra Goryachkina"
- 6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
- வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கொல்கத்தா:
6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 10 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் முதலில் அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடந்து வருகிறது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் 4-வது, 5-வது, 6-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல்நிலை வீரர் கார்ல்சென் நேற்றைய தினம் எரிகைசி, நாராயணன், வெஸ்லி சோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய 3 பேரையும் வரிசையாக தோற்கடித்து அமர்க்களப்படுத்தினார்.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 103-வது நகர்த்தலில் நிஹல் சரினை போராடி வீழ்த்தினார். வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் 'டிரா' கண்டார்.
6 சுற்று முடிவில் கார்ல்சென் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ 3½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா தன்னை எதிர்த்து ஆடிய வந்திகா அகர்வால் (இந்தியா), தமிழக வீராங்கனை வைஷாலி, கேத்ரினா லாக்னோ (ரஷியா) ஆகியோருக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். கோரியச்கினாவிடம் தோல்வியை தழுவிய வைஷாலிக்கு மற்ற இரு ஆட்டங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நானா ஜாக்னிட்ஸ் (ஜார்ஜியா) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இரு பிரிவிலும் இன்று கடைசி 3 சுற்றுகள் நடைபெறும்.