search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allan Border"

    இந்திய வேகப்பந்து வீச்சு அபாரம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் பாராட்டி உள்ளார். #AUSvIND

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்னில் பெற்ற வெற்றியால் இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது.

    நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க உள்ளது என்றும் வெற்றிக்கு தகுதியான அணி என்றும் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டினர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் இந்திய அணியை பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    நம்பர் 1 அணியாக உள்ள இந்தியா தற்போது அதற்கு ஏற்றாற்போல் விளையாடி வருகிறது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களது ஆட்டத்தை பார்க்க சிறப்பாக இருக்கிறது.

    முன்பு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி திணறி வந்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்திய அணி நல்ல வேகப்பந்து வீச்சை பெற்று இருப்பதுதான். அற்புதமான வேகப்பந்து குழுவுடன் ஒன்றிணைந்து உள்ளது.

    நான் பார்த்ததிலேயே இதுதான் நல்ல இந்திய வேகப்பந்து வீச்சு குழு. மேலும் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். பேட்டிங்கும் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாட்டில் உள்ள வேகப் பந்துக்கு சாதகமாக ஆடு களங்களை போன்று இந்தியாவிலும் அமைப்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு கவாஸ்கர்- பார்டர் கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND

    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறியுள்ளார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோ‌ஷத்துடன் செயல்படுவார். விக்கெட் வீழ்ந்ததும் துள்ளி குதித்து கத்தியபடி மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகிறார்.

    பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் பேசி கொண்டனர். நடுவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.


    கோலியின் ஆக்ரோ‌ஷ செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதுபோன்று முன்னாள் வீரர்கள் சிலரும் கண்டித்து இருந்தனர்.



    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    மைதானத்தில் துடிப்பாகவும், ஆக்ரோ‌ஷத்துடனும் செயல்படும் விராட் கோலி போன்ற வீரர்கள் தான் தற்போது கிரிக்கெட்டுக்கு தேவை. தனது அணி விக்கெட்டை வீழ்த்தியதும் கேப்டனாக கோலி வெளிபடுத்தும் உணர்ச்சியை வேறு எந்த கேப்டனிடமும் இருந்தும் நான் பார்த்ததில்லை.



    அது உண்மையில் அதிகமானதுதான். ஆனால் அவர் சரியான பாதையில் செல்கிறார். தற்போது கோலியை போன்று குணாதிசயம் கொண்டவர்கள் கிரிக்கெட்டில் நிறையபேர் இல்லை. ‘நம்பர் ஒன்’ இருக்க நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து ஒரு கேப்டனாக அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் கூறியதாவது:-

    விராட் கோலி மிகவும் உணர்ச்சிமிக்க வீரராக இருக்கிறார். இதனால் தான் மைதானத்தில் அவரிடம் இருந்து ஆக்ரோ‌ஷத்தை நீங்கள் பெறுகிறீர்கள்.



    அவர் சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார். எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார். தான் மட்டுமல்ல தனது நாடும் வெற்றி பெற வேண்டும் என்றே கருதுகிறார்.

    பெர்த் டெஸ்டில் கோலியும், டிம்பெய்னும் தங்களது எல்லையை தாண்டவில்லை. வேடிக்கையாக பேசி கொண்டனர். அவர்கள் ஜாலியாக பேசுவது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது என்றார். #ViratKholi #AUSvIND #AllanBorder
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானர் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் இவருக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் இடம் கிடைத்தது கிடையாது. உள்ளூர் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில், ‘‘மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளருடன் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். இதேபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் தேர்வாளர்களின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும்’’ என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளது.



    தற்போது பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லிற்கு இடம் கிடைக்கலாம்.
    ×