என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar Statue"

    • 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.
    • போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    சத்தார்பூர்:

    மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் கடந்த 11-ந்தேதி அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.

    இந்த சிலையை நேற்று காலையில் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கே குவிந்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    திறக்கப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமாகி இருந்த தகவல் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

    இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணி மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிவகங்கையில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சட்டமேதை அம்பேத்கரின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ், விஜயகுமார், கார்த்திகேயன், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஸ்டீபன், கோபி, அவைத்தலைவர் பாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ணாகுமார், ராபர்ட், நிர்வாகிகள் மோகன், கே.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், தங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, கணேசன் ஆரோக்கியசாமி, ரமேஷ் உட்பட்ட பலர்மாலை அணிவித்தனர்.

    கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரபொது செயலாளர் பாலமுருகன், சதிஷ், பொருளாளர் கவுதம் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
    • சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர், செண்பகமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமை ப்பாளர் அமலி பிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் மணி, மாத்தையா உட்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை யில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்தார். இதில் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பவுன் மாரியப்பன், முத்து ச்செல்வன், கொம்பையா, செண்பகராஜ், நாகராஜ், குழந்தைவேல் உட்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பாக எஸ்.சி. அணி மாநில துணை தலைவர் மாரிமுத்து தலை மையில் மாலை அணி விக்கபப்ட்டது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சங்கரன்கோவில்:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஐயப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர்ஷா, நகர செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அந்தோணி செல்வம், ஸ்டீபன், சங்கர், ஜோதிடர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
    • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

    சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.

    பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.

    அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

    வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

    • பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை என கூறி நெல்லை சந்திப்பில் அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்து பலவே சம், மாவட்ட செயலாளர் நாகராஜன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்க ளுக்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை அவர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.-அ.தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவை தலைவர் வி.கே.முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை மேயர் ராஜு, பொருளாளர் வண்ணை சேகர், எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி மணி, சஞ்சய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா ளர் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலா யுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், டவுன் கூட்டுறவு வங்கித் தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, சீனி முகம்மது சேட், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர் சொக்க லிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, அய்ப்பன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.-ம.தி.மு.க.

    தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் அவைத்தலைவர் மாடசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன், துணைச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் கலைவாணர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செய லாளர் சீயோன் தங்க ராஜ் தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க.-ச.ம.க.

    அ.ம.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன்,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் அழகேசன் தலைமை யிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலை மையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் முத்தையா ராமர் தலைமையிலும், நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலை மையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி-தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சட்ட மேதை அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே அவுட் போஸ்டில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், மண்டலத் தலைவர் வாசுகி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கவுன்சிலர் நந்தினி, திருப்பாலை ராம மூர்த்தி, வாடிப்பட்டி கார்த்திக், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட நிர்வாகி கள், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வேலுச்சாமி குழந்தைவேலு, அக்ரி.கணேசன், சின்னம்மா, ஒச்சுபாலு, மூவேந்திரன், சுதன், ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
    • புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான அன்னிய செலவானி பெற்று தருகின்ற மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டம் ஆகும்.

    தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள்.

    எந்திரங்கள் வந்த பிறகு பாதி பேர் வேலை இழந்துள்ளார்கள். எனவே வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்

    தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்கள் எந்த தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அதில் நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அரசு ஒதுக்கீடாக இருந்தாலும் அதனுடைய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.

    இதுபோன்று தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. அதே போன்று தமிழகத்திலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே இருந்த பாராளுமன்ற கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிலை அமையுமா? மேலும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், கட்டிட வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். மேலும் எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது கொள்கை ரிதியாக நியாயமானது.

    இந்திய குடியரசு கட்சியும் இதனை ஆதரிக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது இந்தியா முழுவதும் மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு நடக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில தலைமை நிர்வாகிகள் தன்ராஜ், கவுரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×