என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andhra Elections"
- ஆந்திராவில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ.க., பவன் கல்யாண் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது.
வருகிற 12-ந் தேதி சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் ஆந்திராவில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் 25 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் பவன் கல்யாணுக்கு துணை முதல் மந்திரி பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் தகவல் தொழில்நுட்ப த்துறை அமைச்சராகவும், நடிகர் பாலகிருஷ்ணா திரைப்பட துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியல் உண்மையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
- நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
- அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் வாக்குபதிவின் போது பல்வேறு இடங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை செய்தபோது வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் பல்நாடு மாவட்டத்தில் பெல்லம் கொண்டா நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
அப்போது அரசு ஊழியராக வேலை செய்து வரும் தன்னார்வலர் ஒருவர் வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரின் தந்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்பகுதி தலைவராக இருந்து வருகிறார். அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
- கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு அடிதடி மோதல் என தேர்தல் காரசாரமாக முடிந்தது. திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் 2 வாலிபர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்களை பார்த்து சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர்கள், இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்தனர். கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.
பிறகு, அவர்களை இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். வாலிபர்களை துணை ராணுவத்தினர் அடித்து வெளுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
- தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர்.
- ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.
இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.
2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்