search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Pradesh Special Status"

    காங்கிரஸ் முன்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் வேலையாக ஆந்திராவுக்கு நிச்சயமாக சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rahulassures #SCStoAP
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து சில பகுதிகளை பிரித்து தெலுங்கானா என்னும் தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தீர்மானித்தது. இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்துக்கு ஏற்படும் பொருளாதார  இழப்புகளை சமாளிக்கும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது.

    தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடைந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

    முந்தைய அரசு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி முன்வைத்த பல கோரிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். எனினும், மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு இன்னும் செவி சாய்க்கவில்லை.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆந்திராவுக்கு நிச்சயமாக சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.



    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    சீனாவில் தினந்தோறும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ராகுல், இந்தியாவில் 450 பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இம்மாநில மக்களின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டார். ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிக்கும்போது,பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தான் எங்கள் முதல் வேலையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். #Rahulassures #SCStoAP 
    ×