search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andhra priest yagna"

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உலக நன்மை வேண்டி 61 நாட்கள் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர் நிர்வாண நிலையில் யாகம் நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரே உள்ள பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைலாச ஆசிரமம் பீடாதிபதி, அட்டயோகிஸ்வரா மவுனிதிகம்பரி ‌ஷட்ட கோபி என்பவர் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் செய்ய கடந்த 25-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார்.

    இவர் திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள பகுதியில் கடந்த 25-ந் தேதி உலக நன்மைக்காக நிர்வாணமாக யாகம் நடத்த தொடங்கினார். இந்த யாகத்தை இவர் 61 நாட்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து நடத்த உள்ளதாக சாதுக்கள் தெரிவித்தனர்.

    5-ம் நாளான நேற்று மாலை நிர்வாண யாகத்தில் யோகிஸ்வர மவுனி திகம்பரி ‌ஷட்டகோபி ஈடுபட்டிருந்தார். அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் சிலர் அவருடன் மந்திரங்கள் ஓதியபடி யாக பூஜையில் ஈடுபட்டனர்.

    நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருக்கும் சாமியார் பேசுவது கிடையாதாம்.

    இவர் பேசி 37 வருடங்கள் ஆகிறது எனவும், தான் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி மட்டுமே காண்பிப்பார் என உடன் வந்த சாதுக்கள் தெரிவித்தனர்.இந்த யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×