search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti sand theft"

    ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மணல் திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமச்சியாபுரம் பகுதியில் டிராக்டரில் 2 பேர் மணல் திருடிச்சென்றனர்.

    போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்து அதனை ஓட்டி சென்ற ராஜேஸ்வரன் (36) என்வரை கைது செய்தனர். தப்பி ஓடிய பூபாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ஆத்தங்கரைபட்டி பகுதியில் வைகை ஆற்று படுகையில் இருந்து மணல் அள்ளி சென்ற செல்லாண்டி என்பவரை ராஜதானி போலீசார் கைது செய்தனர்.

    கரட்டுப்பட்டி பகுதியில் சாக்கு மூட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் திருடி சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே நள்ளிரவில் பதுங்கி மணல் டிராக்டரை தாசில்தார் பிடித்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை 11-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல், சவுடு, தூசு மணல், செம்மண் எடுப்பதற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. ஆண்டிப்பட்டி தாலுகா முழுவதும் டிப்பர், லாரி, டிராக்டர்களில் மணல் வண்டிகள் சாரை சாரையாக சென்ற வண்ணம் இருந்தது. அதிகளவு மண் வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனையடுத்து விவசாயிகளும், தன்னார்வ அமைப்புகளும் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மணல் எடுப்பதற்கான உரிமங்களை முழுமையாக ரத்து செய்தார். இதனால் மாவட்டம் முழுவதும் மணல் எடுக்கவில்லை.

    இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் கணேசபுரம் அருகே விருமானூத்து மெயின் ஓடை, சன்னாசியப்பன் ஓடை, புதுக்குளம் கண்மாய் ஓடை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருடி வந்தனர்.

    இந்நிலையில் ஆண்டிப்பட்டி தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் துறையினர் திருட்டு மணல் வண்டிகளை பிடிக்க ஜி.உசிலம்பட்டி கண்டமனூர் சாலை ஓரம் இரவில் பதுங்கி இருந்தனர். அப்போது லாடசன்னாசிபுரம் சாலை வழியாக இரவு 12 மணியளவில் மணல் ஏற்றி ஒரு டிராக்டர் வந்துள்ளது. அப்போது மறைந்திருந்த தாசில்தார் மணல் வண்டியை மடக்கி பிடிக்க நினைத்த போது, டிராக்டர் டிரைவர் வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ஜீப்பில் வருவாய் துறையினர் விரட்டி சென்றுள்ளனர். ஆனால் டிராக்டர் டிரைவர் போக்கு காட்டி, வேறு பாதையில், விளக்கை அணைத்து விட்டு சென்றுள்ளார்.ஆனால் தாசில்தார் டீம் வண்டி சத்தத்தைக் கேட்டு பின் தொடர்ந்து 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றுள்ளனர். டிராக்டர் டிரைவர் அருகிலிருந்த கண்மாய் அருகே சென்ற போது பாதையில்லாததால் வண்டியை நிறுத்தி ஓடியுள்ளார். அவரை விரட்டி பிடிக்க முற்பட்ட போது , கண் இமைக்கும் நேரத்தில் அவர் அருகில் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து மறைந்துள்ளார். இதனால் மணலுடன் டிராக்டரை கொண்டு வந்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×