search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angalaparameswari amman temple"

    • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
    • பவுர்ணமியான இன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி பவுர்ணமி யான இன்று மேல்மலை யனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சிமஸ்தான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்கு–மார், உதவி ஆணையர் ஜீவானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிர–மணியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். 
    ×