search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Square"

    அமெரிக்காவில் சர்கா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #Vijay
    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய்,  நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, சூரி, விஷால், நந்தா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #Vijay

    திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டியளித்த நடிகர் விஜயகுமார், கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar
    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    3-வது நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்தும் பலர் அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணமாக உள்ளனர். 

    முன்னதாக நடிகர் கார்த்தி நேற்று கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், இன்று காலை நடிகை ஜெயசித்ரா கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 


    நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இன்று காலை கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் விஜயகுமார் பேசியபோது, கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar #JeyaChitra

    சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே, கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
    திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர். 

    இந்த நிலையில், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இன்று காலை கவிஞர் வைரமுத்து அவரது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha

    சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
    திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

    கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர். 



    மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi  #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu

    ×