search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annabhishekam today"

    • ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னம் இட்ட போது அவரைப் பிடித்திருந்த பிரம்ம ஹத்தி தோஷத்தில் இருந்து விடு பட்டார். அவர் அன்னம் இட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. இதனால் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னா பிஷேக வழிபாடு நடை பெற்று வருகிறது. அன்னா பிஷேக பிரசாதத்தை உண்டால் நோய், நொடிகள் வராது என்பது ஐதீகம்.

    இன்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கம், நந்தியின் மீது, வடித்து வைக்கப்பட்ட சுத்தமான அன்னத்தை ஆண், பெண் பக்தர்கள் கொட்டி அபிஷேகம் செய்தனர். பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மீதம் உள்ள உணவு நீர்வாழ் உயிரினங்களுக்காக சுருளி புண்ணிய நதியிலும், முல்லைப் பெரியாற்றிலும், ஏரி, குளங்களிலும் கரைக்க பட்டது. இதையடுத்து அன்னதான மடத்தில் மாலை வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குருகுலம் சிவனடியார்கள், பக்தர்கள் குழு , ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலும் இன்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடை பெற்றது.

    ×