என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ansi Kabeer"
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25).
அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார்.
இவரது தோழி அஞ்சனா சாஜன் (26). திருச்சூரை சேர்ந்த இவர் ஆயுர்வேத டாக்டர். இவரும் 2019-ம் ஆண்டு நடந்த மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார்.
அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் தோழிகள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1-மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை அன்சி கபீர் ஓட்டினார். அவர்களுடன் மேலும் இரண்டு நண்பர்கள் இருந்தனர்.
எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க அன்சி கபீர் காரை திருப்பினார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா சாஜன் மற்றும் அவர்களுடன் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் விபத்து பற்றி உடனடியாக தகவல் தெரியவில்லை.அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் விபத்து பற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.காரில் இருந்த மற்ற இருவரும் படுகாயங்களுடன் இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இதையும் படியுங்கள்...வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்