search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "any party"

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Duraimurugan #DMK #Raid

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலும் சென்று வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் அதிரடியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் தேர்தல் நடவடிக்கையை முடக்கும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. வருமான வரித்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருவது ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


    தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை அமைந்துள்ளது. தேர்தல் காலங்களில் எதிர்க் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை அச்சுறுத்தும் போக்கினை வருமான வரித்துறை கைவிடவேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் மூலம் வருமான வரி சோதனை நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருவது கண்டனத்திற்குரியது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு காபந்து அரசாக செயல்படும் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் சோதனை நடத்துவதுஎன்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் ஏற்பட விருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பாஜக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Duraimurugan #DMK #Raid

    எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல என்றும் தொகுதி பங்கீடு செய்தால்தான் கூட்டணி என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். #DMK #DuraiMurugan

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளே” என்று கருத்து தெரிவித்தார்.

    துரைமுருகனின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் கடும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது. ம.தி.மு.க.வையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க. சற்று தொலைவில் வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைமுருகனின் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினோ மற்ற மூத்த தலைவர்களோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் மன வேதனையை உண்டாக்கி இருக்கிறது.

    நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தொடர்ந்து மவுனமாக உள்ளார்.

    என்றாலும் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகிற 3-ந்தேதி கவர்னர் மளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ள ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது ம.தி.மு.க.வினரிடம் நிம்மதியைக் கொடுத்துள்ளது.


    இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானது தான் என்பதை வலியுறுத்தி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பொதுநல நோக்கத்துடன் பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும் மணமகனாகவும் இருக்கிறோம்.

    ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்- மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திரு மணபந்தம் ஏற்படவில்லை.

    தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன. அந்தத் தோழமைக் கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல.

    ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan

    ×