என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » apostle thomas
நீங்கள் தேடியது "apostle thomas"
திருச்சி மாவட்டம் புனித தோமையார் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஆலம்பாக்கம் கிராமத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், நேற்று காலை 8 மணியளவில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கிராம மக்களின் சார்பில் புனித தோமையார் சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தொன்போஸ்கோ மற்றும் இறைமக்கள், தோமையார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி புனித தோமையார் ஆலய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில், பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 22-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் பாஸ்கா திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையில் தூம்பா பவனியும், 26-ந் தேதி ஆண்டவர் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா மற்றும் ரத பவனி நடைபெற்றது.
இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் சொரூபம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடு வீதியில் உயிர்த்த ஆண்டவர், தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் உயிர்த்த ஆண்டவர் ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் மந்திரிக்கப்பட்டது. பின்னர், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலையடிப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.
வையம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

×

X