search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple 1"

    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. #Apple
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உருவாகி வருகின்றன.

    இந்த நிலையில் இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்ப்யூட்டர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அதை ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்ப்யூட்டர் 666.68 அமெரிக்க டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.



    ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை வடிவமைத்தனர். இவற்றில் 175 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது ஒன்றுதான் ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த கம்ப்யூட்டர் ஜூன் 2018-இல் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சீராக வேலை செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

    மற்ற ஆப்பிள் 1 போர்டுகளை போன்று இல்லாமல், ஏலத்தில் விற்பனையான போர்டில் எவ்வித மாறுதல்களும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் இதன் ப்ரோடோடைப் பகுதி பயன்படுத்தாமல், சுத்தமாக இருக்கிறது.
    ×