என் மலர்
நீங்கள் தேடியது "Appreciation"
- விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000 தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.
- உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கபீர் புரஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000 தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.
சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.
மேலும், இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிவிக்கையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கான கடைசி தேதி 14.12.2022 ஆகும்.
மேலும், மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசி வாயிலாகவோ ( தொலைபேசி எண்: 04362-235633) விபரம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.
- வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, குரவப்புலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. இவரது கணவர் சித்த மருத்துவர் சரவணகுமரன் தம்பதியினர்.
இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.
அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பழங்கால மரபுகளை மீட்டெடுத்து வருகின்றனர்.
இவர்களது மீட்டெடுப்–புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது-2022 அறிவித்து இவ்விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதவிர, சிவரஞ்சனி வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், சிவரஞ்சனியை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளார்.
இத்தம்பதியினர், 1500 வகையான ரக நெல் விதைகளை தனது 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர்.
இவரது வயல்களில் மருத்துவ குணம் நிறைந்த தமிழ்நாட்டு நெல் ரகங்களான கருங்குறுவை, மாப்பிள்ளை சாம்பா, குடவழை, ஓட்டம், கருப்பு கவுணி, நவரா, பூங்கார், ரத்த சாவி, காலாநமக் ஆகிய நெல்வகைகளும், மேற்குவங்க நெல்வகைகளான ராமல்லி, ஓரகழமா, ராஜகழமா மற்றும் கேரளா நெல் வகைகளான ஜெகன்னாத் போக், ஒரிசா புல், கர்ணா புல் ஆகியவைகளை சாகுபடி செய்துள்ளார்.
இதனை ஏராளமான விவசாயிகளும், விவசாய துறை அதிகாரிகளும் பார்–வையிட்டு இத்தம்பதியின் முயற்சியை பாராட்டினர்.
- சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
- சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
வெள்ளகோவில்:
தமிழக ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு, தனியார், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், திருப்பூர் பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், உடுமலைப்பேட்டை வட்டத்தில் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் தமிழக அரசின் விருதுகளை பெற்றிருக்கிறது. இந்த விருதுகளைப் பெறக்கூடிய வகையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ம் பயிலும் மாணவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- தங்கப் பதக்கத்தை வென்றார்
- தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் அரியலூர் கோட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தங்கம் (வயது 19). இவர் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் 48 நிமிடம் 52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தங்கப்பதக்கத்தை வென்ற தங்கத்திற்கு மாநில நெடுஞ்சாலை துறை, சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள தங்க மங்கையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து உலக அளவில் பல்வேறு பதக்கங்களையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த வீராங்கனையை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கூறினார்.
- காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கேயம் :
திருப்பூர் மாவட்டம்காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன் ,தலைவர் சூரிய பிரகாஷ் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.
அப்போது பெரியார் நகர் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு சமுதாயக்கூடம், கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தனர் .அவற்றை செய்வதற்கு ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமார் முன் வருவதாக தெரிவித்தார்.
இதை அறிந்த நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன் சமுதாயப் பணிகள் ஈடுபடும் ஆற்றல் அறக்கட்டளையை சமுதாய கூடம்கட்டும் பணியை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாரின் சமுதாயப் பணிக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். நகராட்சி தலைவர் சூரிய பிரகாசும் பாராட்டு தெரிவித்தார். அப்போது வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும் சந்தனகுமார் உடனிருந்தனர்.
ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு, திருப்பூர் ,நாமக்கல் மற்றும் திருச்சி ,விழுப்புரம் மாவட்டங்களில் பழுதடைந்த நூற்றுக்கும் மேற்பட்டஅரசு பள்ளிகளை சீரமைத்து ஒப்படைத்து வருகிறது.மேலும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 230 மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
- பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முடியாமல் வெகு நேரமாக சாலையில் நடுவே காத்திருந்தார். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், இதைப் பார்த்து அந்த முதியவர் அருகில் சென்று விசாரித்த பொழுது, அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், உடனடியாக அருகில் இருந்த ஒருவரின் உதவியுடன், அந்த முதியவரை கை தாங்கலாக, தூக்கிச் சென்று சாலையை கடக்க உதவி செய்தார். இதை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
- ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.
கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.
வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 75 மற்றும் 80 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.
- குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000 ஆக வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம், ஆண்டு விழா , 75 மற்றும் 80 அகவை நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனி .அய்யாகண்ணு தலைமை தாங்கினார்.
மாநில துணை பொது செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஞானசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டாக்டர் சேதுராமன் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
மாநிலத் தலைவர் சீதாராமன், மாநில பொது செயலாளர் மருதை ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் ஜாகிர் உசேன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், கருவூலர் கணக்கு துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் மகேஸ்வர், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ராசமாணிக்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மாநில தணிக்கையாளர் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை வட்டக் கிளை தலைவர் ரெஜினால்டு செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் 75 மற்றும் 80 அகவை நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் (பொ) மீனாட்சி பரிசு வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மத்திய அரசு 1-7-2022 முதல் வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படியை அதே தேதியில் இருந்து உடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத கால 14 சதவீத அகவிலைப்படியையும் 1-1-2022 முதல் 1-7-2022 வரை வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவையையும் உடன் வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து மருத்துவ செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும். கண்புரை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூ.2 லட்சமாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000-ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும், அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருட்டிணன், எஸ்தர் தாஸ், தஞ்சை ராமதாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் வசந்தா நன்றி கூறினார்.
- ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி குருசந்திரசேகர் உள்ளார். இவர் ஊராட்சித் தலைவராக பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வருகிறார்.
லட்சுமியும், அவரது கணவர் குரு சந்திரசேகரும் திண்டியூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் இல்லத் திருமண நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை குடும்பங்களுக்கு திருமண சீர்வரிசையாக தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, தலகாணி உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.
மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக வேஷ்டி,சேலை, இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் அரசு நிர்ணயித்த தொகையில் தரமான வகையில் சாலை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். இதற்கு தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிட கட்ட அரசு அனுமதி வழங்கி அதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீடு செய்து வழங்கியது.
இருந்த போதிலும் இந்த கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணத்தில் ரூ.13 லட்சம் செலவு செய்து ஆக மொத்தம் 31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டிடத்தை நாளை 6-ந் தேதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி திறந்து வைக்கிறார்.
இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
- மாணவ- மாணவிகள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டி விளையாடினர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் ஒலிம்பிக் கொடி ஏற்றி முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ரதிகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் ஜெகதீசன், இலக்குவன், வாண்டையார் இருப்பு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மகேந்திரன், டி.என்.எஸ்.டி.சி. கண்காணிப்பாளர் ராமலிங்கம் (ஓய்வு) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அவர்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டி விளையாடினர்.
பின்னர் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சஞ்சாய் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன், நல்லாசிரியர் வரதராஜன், மருத்துவர் ராஜேந்திரன், ஒப்பந்தக்காரர்கள் வைத்திலிங்கம், ஜெயபால், பாஸ்கரன், செயற்பொறியாளர் (ஓய்வு) இன்பரசு , முன்னாள் மாணவர் வெங்கடாசலம் , தலைமையாசிரியர் (ஓய்வு) மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் ஜீவலட்சுமி, முன்னாள் மாணவர்கள் சந்திரபோஸ், திருநாவுக்கரசு, தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தொழிலதிபர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). இவர் கடந்த 7-ந்தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .
அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள் முதன் முறையாக ராஜ பாளையம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இதை வெற்றி கரமாக செய்துமுடித்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தற்போது மாரியப்பன் நலமாக உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதில் தலைமை மருத்துவர் மாரியப்பன், மருத்துவர் சுரேஷ், திருமுருகன், சேத்தூர்சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன், கருப்பழகு, தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
- தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது மீனவர்கள் வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது.
இதையடுத்து, தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மனோரா கடற்கரையில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் மீனவர்கள் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், சேதமடைந்த மீன் வலைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மொத்தம் ரூ.1 லட்சம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வன அலுவலர் பேசியதாவது:- அபூர்வ வகை உயிரினங்களான கடல் பசுவை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் வாழுமிடமான கடற்பா சிகளை உருவாக்குவதில் அவுரியா முக்கிய இடம் வகிக்கிறது.
கடல் பசு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவற்றை பிடிக்க கூடாது.
கடல் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், கடல்பசுவின் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து கடலுக்குள் மீண்டும் விடும் வகையில் மீன்வளத்துறை, வனத்துறை சார்பில் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வனச்சரகர்கள் குமார், ரஞ்சித், வனவர் சிங்காரவேலு, கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜலீலா பேகம் (சரபேந்திரராஜன்பட்டினம்), முரளி (திருவத்தேவன்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மீனவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.