search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aravindh kejriwal"

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் உரைக்கு, 5 ஆண்டுகளில் பிரதமர் வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் என பதிலடி கொடுத்துள்ளார். #AravindKejriwal #PMModi
    புது டெல்லி:

    இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் புது டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  ‘டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி செயல் திறனற்று இருக்கிறது. மேலும் கெஜ்ரிவால் ஆட்சியில் சிறந்த செயல்கள் ஏதும் செய்யவில்லை. அங்கு ஒர் அராஜக ஆட்சி நடைபெறுகிறது’ என கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டிருப்பதாவது:



    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, கருத்து சொல்வது போன்ற பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதை தவிர எவ்வித பணிகளும் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாகவே பொய்யாக தேசியவாதம் எனும் பெயரில் வாக்கு சேகரித்து வருகிறார்.   

    நீங்கள் பதிலே சொல்லமுடியாத மூன்று முக்கிய கேள்விகளை டெல்லி மக்கள் கேட்கிறார்கள்.

    முதல் கேள்வி: டெல்லி சரியாக இயங்கவில்லை என்றால் ஏன் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை?

    இரண்டாவது கேள்வி: 2014ல் பாஜக, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியது.  ஏன் வழங்கவில்லை?

    மூன்றாவது கேள்வி: இம்ரான் கான் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். #AravindKejriwal #PMModi

    பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். #LokSabhaElections2019 #AamAdmiManifesto
    புது டெல்லி:

    இந்தியாவில்   கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் வெளியிட்டார். இதேப்போல் கடந்த 8ம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.



    இந்நிலையில் இன்று காலை  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. #LokSabhaElections2019 #AamAdmiManifesto


    பாராளுமன்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித் சரியாக ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியிருக்க மாட்டேன் என கூறியுள்ளார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்  கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தற்போதுள்ள மோடி அரசு எப்படி நாட்டை மோசமாக வழி நடத்துகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸைச் சேர்ந்த டெல்லியின் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தும் ஆட்சி நடத்தினார் என பலர் கூறியுள்ளனர். அவர் நல்ல முறையில் ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மியை நான் தொடங்க வேண்டிய அவசியமே இல்லை. டெல்லியில் பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை எதுவுமே அவரது ஆட்சியில் சரிவர செயல்படவில்லை. 



    அவரைத் தொடர்ந்து வந்த மோடி அரசும் மக்களை ஏமாற்றுகிறது. டெல்லியில் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், மொகலா கிளினிக் ஆகியவற்றை அமைக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் மக்களுக்கான  எங்கள் பணியை மோடி அரசால் தடுக்க இயலாது. டெல்லியில் மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் அனுமதி வழங்கவில்லை.

    அனைத்து நலப்பணிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் திட்டங்களை நிறைவேற்ற சுதந்திரம் உள்ளது. ஆனால் டெல்லிக்கு இல்லை. மத்திய அரசின் செயல்களில் அதிருப்தி ஏற்பட்டிருப்பவர்கள் மீண்டும் அவர்களுக்கு ஓட்டுப்போடாதீர்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதே நிலை நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi 
    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார். #AAP #AravindKejriwal #BJP
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 20-ம் தேதி, துடைப்பத்துடன் ஒருவர், சுவஸ்திக் போன்ற  சின்னத்தினை துரத்துவது போல உள்ள படத்தினை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு பாஜக ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.



    இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும், மத வெறுப்புகளை தூண்டும் விதமாக கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார் என்றும் அவர்  மீது பாஜக தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

    மேலும் அந்த பதிவில் இருந்த சின்னம் இந்துக்களின் வழிபாட்டு சின்னங்களில் ஒன்றான சுவஸ்திக் சின்னத்தினைபோல் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

    இது குறித்து கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர்  கூறியிருப்பதாவது:

    நான் பகிர்ந்த பதிவிற்கு பாஜகவினர் தவறான விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அந்த பதிவு ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை குறிக்கும் விதமாகவே உள்ளது. பாஜகவினர் முதலில் நாஜி சின்னத்திற்கும், இந்து சின்னத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்ள வேண்டும். இது முட்டாள் தனமான செயலாகும். நாஜி சின்னத்தை தங்கள் சின்னமாக கூறுவது பாஜகவின் அறியாமையை குறிக்கிறது.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார். #AAP #AravindKejriwal #BJP 







     
    ×