search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Argentina Foot Ball Team"

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் சம்போலி ராஜினாமா செய்ததால் தற்போது புது பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டினா செப்டம்பர் 3-ந்தேதி கொலிம்பியாவையும், செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும் எதிர்கொள்கிறது.



    இந்நிலையில் பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் ‘‘பின்னர் அர்ஜென்டினா அணிக்கு நிலையான பயிற்சியாளரை நியமிப்போம்’’ என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தெரிவித்துள்ளது.
    நாக்அவுட் சுற்றில் விளையாடுவதற்காக ஹோட்டலில் தங்கியுள்ள மெஸ்சி, தினமும் கிறிஸ்டியானா ரொனால்டோவின் முகத்தில்தான் விழிக்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தது. நாளை முதல் நாக்அவுட் சுற்றுகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கசன் மைதானத்தில் நடைபெறுகிறது. அர்ஜென்டினா கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த 26-ந்தேதி நைஜீரியாவை எதிர்கொண்டது.

    அதன்பின் நாளைய போட்டிக்காக கசனில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அர்ஜென்டினா வீரர்கள் தங்கியுள்ளனர். அங்கிருந்து மைதானத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மெஸ்சி தங்கியுள்ள ஓட்டல் அருகில் உள்ள நான்கு ஸ்டார் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கான்பெடரேசன் கோப்பைக்காக போர்ச்சுக்கல் அணி தங்கியிருந்தது. அப்போது அந்த ஹோட்டல் சுவற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராட்சத படம் வரையப்பட்டிருந்தது.



    தற்போது மெஸ்சி காலையில் எழுந்ததுடன் இந்த படத்தில்தான் விழிக்க வேண்டிய நிலை உள்ளது. இருவரும் கால்பந்து போட்டியில் எப்போதும் எதிராயாகத்தான் திகழ்கிறார்கள்.

    ஒருவேளை நாக்அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் காலிறுதியில், போஸ்டரில் பார்த்த முகத்தை மெஸ்சி நேரில் சந்திக்க வேண்டியிருக்கும்.
    மெஸ்சியின் தீவிர ரசிகரான கொல்கத்தாவைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் தனது வீட்டிற்கு அர்ஜென்டினா அணியின் கலரை அடித்துள்ளார். #WorldCup2018
    கால்பந்து விளையாட்டில் தற்போதைய தலைமுறையில் சிறந்த வீரர்களாக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் மெஸ்சிக்கும், ரொனால்டோவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

    இருவருக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வரும் வியாழக்கிழமை ரஷியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டிற்குத்தான் அதிக முக்கியத்தும் இருந்தாலும், கால்பந்து போட்டிக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

    தற்போதைய நிலையில் கொல்கத்தாவில் (இந்தியா) கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெஸ்சியின் தீவிர ரசிகர். ரஷியா செல்ல வசதியில்லாதால், அர்ஜென்டினா அணியின் ஜெர்சி வண்ணத்தை வீடு முழுவதும் அடித்து போட்டியை வரவேற்க உள்ளார்.

    கொல்கத்தாவில் டீக்கடை வைத்திருப்பவர் ஷிப் ஷங்கர் பத்ரா. கொல்கத்தாவின் ஆயிரக்கணக்காக அர்ஜென்டினா ரசிகர்களில் இவரும் ஒருவர். இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

    இவருடைய ஆசையெல்லாம் ரஷியா சென்று அர்ஜென்டினா போட்டியை நேராக பார்க்க வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் 60 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். ஆனால் டிராவல் ஏஜென்ட் ரஷியா சென்று போட்டியை பார்க்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால் இவரது கனவு வீணானது.

    நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், சற்றென்று அவருக்கு ஒரு ஐடியா வந்தது. அதன்படி தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றிவிடடார்.



    நவாப் கஞ்ச் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் பத்ரா கூறுகையில் ‘‘நான் புகை பிடிக்க மாட்டேன். அதேபோல் போதை பழக்கமும் கிடையாது. நான் அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்சியின் விளையாட்டிற்கு மட்டுமே அடிமை. நான் அதிக அளவில் சம்பாதிக்க வில்லை. ஆனால் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும்போது, இதற்காக ஓரளவிற்கு பணம் தனியாக சேர்த்து வைப்பேன்.

    எனக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் மெஸ்சியின் ஒரு போட்டியை கூட விடுவதில்லை. தேர்வுக் காலத்தின்போது நள்ளிரவில் போட்டி நடந்தால் கூட, தூங்குவதுபோல் நடித்து, செல்போனில் போட்டியை பார்ப்பார்கள்’’ என்றார்.
    ×