search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong murder case"

    • தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒருவரான திருவேங்கடம் நேற்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    விசாரணையின் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதற்கு போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் திருவேங்கடம் சம்பவ இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் அதில் தொடர்புடனைய கைதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

    • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.
    • வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

    ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இதுபோல் நடந்திருக்க கூடாது. சென்னையில் ஒரு அரசியல் தலைவர் அவரது சொந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.

    சித்தாந்தத்தில் நேர் எதிராக இருந்தாலும் இந்த படுகொலையை பாஜக ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறி உள்ளது.

    வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

    முதலமைச்சரின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை சமாதானம் செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.

    காவல் துறையின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் சரி வராது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் இன்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஏற்றப்பட்ட வாகனம் அவரது இல்லத்திற்கு புறப்பட்டது.

    இந்நிலையில், ஆம்ஸ்வ்ராங் உடல் கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.

    அனுமதி கோரி மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

    ஆனால், நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    அதனால், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கை மாநகராட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்தது.
    • கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கோகுல், விஜய், சிவசக்தி என்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×