search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachal"

    அருணாசல பிரதேச மாநிலத்தில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார். #Arunachal #PemaKhandu
    இட்டாநகர்:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்துக்கும் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தற்போதைய முதல்- மந்திரி பெமா காண்டு, முக்தோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார்.

    மொத்த வேட்பாளர்களில் 131 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 67 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளும், 44 பேருக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Arunachal #PemaKhandu 
    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு ஆகின்றனர். #Arunachal #BJPCandidate
    புதுடெல்லி:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதி முடிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதேபோன்று ஆயுள்காலம் முடிகிற சிக்கிம், ஒடிசா, ஆந்திரா மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது.

    60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில், ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள்.

    அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

    இதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் 2 பதிவுகள் வெளியிட்டார்.

    ஒரு பதிவில், “அருணாசல பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஆலோ கிழக்கு தொகுதியில் சர் கெண்டோ ஜினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், “அருணாசலபிரதேசத்தில் இருந்து மற்றொரு வெற்றியும் வந்திருக்கிறது. யாசூலி சட்டசபை தொகுதியில் எர் தபா தெதிர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

    2009 சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி தோர்ஜீ காண்டுவும் (காங்கிரஸ்), 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போட்டியின்றி தேர்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.
    அருணாசல பிரதேசத்தில் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த வன்முறையில் துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். #ArunachalPradesh #Protest #ResidencyCertificate
    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந்தேதி முதல் தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது.

    அந்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் மீறி நேற்றும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    அத்துடன் அந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் பெரும்பாலானவை போலீசாரின் வாகனங்கள் ஆகும்.

    அங்கு தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கைவிட்டு அமைதி காக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  #ArunachalPradesh #Protest #ResidencyCertificate
    அருணாச்சலப்பிரதேசத்தின் தேஸு பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் வட கிழக்கு பகுதியான லோஹித் மாவட்டத்தில் உள்ள தேஸு என்ற பகுதியில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். 5.2 ரிக்டர் என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
    சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழு உரிமை உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.



    இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.4 லட்சம் கோடி) தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.

    இந்திய எல்லைப் பகுதி அருகே பெரும் அளவில் சுரங்கம் தோண்டு பணிகளில் சீனா ஈடுபட்டு வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார்.  #China #GoldMine
    ×