search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arupada Veedu"

    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முருப்பெருமானின் கோவில்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    6ம் நாளான இன்று அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம்:

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் இருப்பது திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு தான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டு நிகழ்வு நடந்ததாக கூறப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் இன்று சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்த சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

    • இரண்டாவது படை வீடு, திருச்செந்தூர் முருகன் கோவில். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    இங்கு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வர, முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார்.

    • மூன்றாவது வீடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலத்தில் இங்கு தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

    இங்கு, வீரபாகு, நவ வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு முருகன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    • நான்காவது வீடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் அழைக்கப்படுகிறது.

    இங்கு, சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலைசுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. பின்னர், மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெற்றது.

    • ஐந்தாவது வீடு திருவள்ளூரில் உள்ள திருத்தணி. கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளில் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால், முருகனின் 5ம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது. அன்றைய தினம் திருத்தலம் அமைதியாக இருக்கும்.

    அதற்கு காரணம், முருகன் கோபம் தணிந்து வள்ளியை திருமணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம். அதாவது, திரு தணிகை தான் திருத்தணி என்று கூறப்படுகிறது. அதனால், இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.

    • ஆறாவது வீடு மதுரை மாவட்டத்தில் உள்ள பழமுதிர்சோலை. முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

    முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், வதம் செய்தார். பின்பு நாவல் மரத்தடியில் நின்று பத்மாசூரனை சம்ஹாரம் செய்தார். சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அறுபடை வீடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.

    • மாநில அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது.
    • தேசியஅளவிலான யோகாசன போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    சித்தர்பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் யோகாசன பாரதம் இணைந்து மாநில அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது.

    பல்வேறு பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் ஜோடி கலைப்பிரிவில் ஆறுபடை வீடு மருத்துவமனை பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் அரவிந்த்ராஜ், தரணி ஆகியோர் முதல் பரிசும், பாரம்பரிய பிரிவில் புஷ்பராஜ் 3-ம் பரிசும் பெற்றனர். மேலும் இவர்கள் தேசியஅளவிலான யோகாசன போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வேந்தர் டாக்டர் கணேசன், கல்லூரி டீன் டாக்டர் ராகேஷ் சேகல்,

    பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிசங்கர் மற்றும் பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    ×