search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arvindh kejriwal"

    ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாக்கும் பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் பரிந்துரையை உ.பி. மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

    உ.பி. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உங்களால் தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். முதல் மந்திரி நாற்காலியை இதுபோல் தனியார் நிறுவனத்துக்கு அளித்து பாதுகாக்க செய்ய முடியுமா? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    ×