என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » asean counterparts
நீங்கள் தேடியது "ASEAN Counterparts"
சிங்கப்பூரில் நடக்கும் ராணுவ மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிசை சந்தித்து பேசியுள்ளார்.
சிங்கப்பூர் :
ஆசியான் நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் இடையே பல்வேறு நாடுகளின் ராணுவ மந்திரிகளை அவர் சந்தித்து பேசி வருகிறார்.
அன்படி அவர் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிசை சந்தித்து பேசினார். இதைப்போல மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளின் ராணுவ மந்திரிகளையும் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் ராணுவ மந்திரி நெக் எங் ஹென்னையும் சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளும் பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணி வரும் நிலையில், இந்த சந்திப்பின் போது புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, இருநாட்டு போர்க்கப்பல்களின் பரஸ்பர வருகை உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்புகிறார்.

×

X