search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup Final"

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தவான் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபு தாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தாலும். என்றாலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோன் என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘வங்காள தேசம் அணி மிகவும் பேலன்ஸ் ஆன அணி. அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக அவர்கள் நின்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன. அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டா், முடிவுகள் இயற்கையாகவே வந்து சேரும்.



    வங்காள தேசம் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். வங்காள தேசத்தை தவிர ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம். அனுபவமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கூட நெருக்கடிக்கு உள்ளாவது கிடையாது. இது சிறந்த விஷயமாகும். சூப்பர் 4 சுற்றில் அவர்களை தோற்கடித்திருந்தாலும், நாளைய போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்றார்.
    ×