என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "asian cup cricket"
துபாய்:
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெறுகிறது. 1993-ல் அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.
2016-ம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என சுழற்சி முறையில் நடத்த திட்டமிடப்பட்டது. கடைசியாக 2016-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
14-வது ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் இந்தப்போட்டி நடக்கிறது.
ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் தலா 1 முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
20-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. ‘சூப்பர் 4’ சுற்று 21-ந்தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இறுதிப்போட்டி 28-ந்தேதி நடக்கிறது.
கேப்டன் வீராட்கோலிக்கு இந்தப்போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆங்காங்கை 18-ந்தேதியும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 19-ந்தேதியும் சந்திக்கிறது.
நாளைய தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பையை இந்தியா 6 முறையும், இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. #AsianCupcricket