search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Para Sports"

    • 2018-ல் 72 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தை பிடித்திருந்தது
    • தற்போது 39 பதக்கங்கள் அதிகமாக பெற்றுள்ளது

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு 107 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலத்துடன் 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், ஈரான் 131 பதக்கங்களுடன் (44 தங்கம்) 2-வது இடத்தையும், ஜப்பான் 150 பதக்கங்களுடன் (42 தங்கம்) 3-வது இடத்தையும், கொரியா 103 பதக்கங்களுடன் (30 தங்கம்) 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    முதல் பாரா ஆசிய விளையாட்டு கடந்த 2010-ல் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் 15-வது இடத்தை பிடித்தது.

    2014-ல் 15-வது இடத்தையும், 2018-ல் 9-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா இதுவரை 82 பதக்கங்கள் வென்றுள்ளது
    • கடந்த 2018-ல் 72 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது அதிக பதக்கங்கள் வென்றுள்ளது

    ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி கலந்து கொண்டார்.

    இவர் சிங்கப்பூர் வீராங்கனை அலிம் நுர்-ஐ வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சீத்தல் தேவி 144-142 என வெற்றி பெற்றார். நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 72 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

    கடந்த 2018-ல் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் வென்றுள்ளது.

    • நேற்றைய முடிவில் இந்தியா 64 பதக்கத்துடன் (15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது.
    • சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    ஹாங்சோவ்:

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வாரி குவித்தனர். ஈட்டி எறிதலில் எப்.64 பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் சுமித் அன்டில் 73.29 தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அத்துடன் தனது முந்தைய உலக சாதனையை (70.83 மீட்டர்) தகர்த்து புதிய சாதனையை படைத்தார்.

    மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் வெண்கலப்பதக்கம் (62.06 மீட்டர்) பெற்றார். அரியானாவைச் சேர்ந்த சுமித் அன்டில் 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் இடது முட்டிக்கு கீழ் காலை இழந்தவர் ஆவார். இதே போல் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் எப்.46 பிரிவில் 68.60 மீட்டர் தூரம் வீசி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரிங்கு, அஜீத் சிங் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

    ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அன்குர் தாமா 4 நிமிடம் 27.70 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்த அன்குர் தாமா ஒரு ஆசிய விளையாட்டில் 2 தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரக்ஷிதா ராஜூ, கிலகா லலிதா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.

    நேற்றைய முடிவில் இந்தியா 64 பதக்கத்துடன் (15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது. சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    ×