search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Wrestling Championship"

    • அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.
    • இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார்.

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் 8-1 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அக்டென்ஜி கெனிம்ஜாவாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    அரியானாவை சேர்ந்த 18 வயதான அன்திம் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்திம் பன்ஹால் தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகார்கி புஜிநமியை சந்திக்கிறார்.

    57 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் நான்ஜோவிடம் வீழ்ந்தார். தோல்வி அடைந்த அன்ஷூ மாலிக் அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பங்கேற்கிறார்.

    • இறுதி போட்டியில் ஜப்பானின் அமி இஷி அதிரடியாக விளையாடி தங்கம் தட்டி சென்றார்.
    • இந்திய வீராங்கனை பிரியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜுகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    ஆஸ்தானா:

    கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 68 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா கலந்து கொண்டார்.

    அவர் போட்டியில் 10-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையான தெல்கர்மா என்க்சாய்கானை காலிறுதி போட்டியில் வீழ்த்தி முன்னேறினார். அரையிறுதி போட்டியில் சீனாவின் பெங்ஜாவை வீழ்த்தினார்.

    எனினும் இறுதி போட்டியில் ஜப்பானின் அமி இஷி அதிரடியாக விளையாடி தங்கம் தட்டி சென்றார். நிஷா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று மகளிருக்கான 76 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பிரியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜுகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இதனால், இந்தியாவின் பதக்கம் 6 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு, ரூபின் (55 கிலோ) வெள்ளி பதக்கமும், நீரஜ் (63 கிலோ), விகாஸ் (72 கிலோ) மற்றும் சுனில் குமார் (87 கிலோ) வெண்கல பதக்கங்களும் வென்று உள்ளனர்.

    ×