என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assault"

    • வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
    • படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர் 

    வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.
    • சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • பூல் பாண்டி என்ற கண்ணன் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • ஹரிஹரனுக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் பூல் பாண்டி என்ற கண்ணன் (வயது 30). இவர் சுத்தமல்லியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடைக்கு அரிசி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியரான டவுனை சேர்ந்த ஹரிஹரன் (20) என்பவருக்கும், கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் கண்ணன் ஆத்திரமடைந்து ஹரிகரனை தாக்கியுள்ளார். இது தொடர்பாக பேட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
    • தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.

    இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை.

    நீடாமங்கலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோ ட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகம் புளியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வைரப்பன் (33) அவரின் மனைவி குடும்பபிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோபித்த க்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக வைர ப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பின்னர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு இறந்துள்ளார்

    ஜெயலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்தவரின் பிரேதம் கும்பகோணம் அரசு மருத்து வமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களர்.

    இறந்த வைரப்பனுக்கு மகன் ஹரிஹரன் (6) மகள் சிவானி (3)இருவரும் அவரது அம்மாவுடன் திருப்பூரில் இருந்துள்ளார்கள்

    இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சொந்த அண்ணன் வேலப்பன்(39) என்பவர் வைரப்பனை கட்டையால் தாக்கியது போலீஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
    • டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் இருந்து நேற்று மாலை திருவக்கரைக்கு சென்ற, தடம் எண் 12என்ற எண் கொண்ட அரசு பஸ், மீண்டும் திருவக்கரையிலிருந்து பயணிகளை ஏற்றி க்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்எ ன்பவர் ஓட்டி சென்றார். அப்போது மயிலம் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அரசு பஸ் மீது மோதுவது போல் கட்டடித்து சென்றுள்ளனர். இதனால் பஸ் டிரைவர் அவர்களிடம் எதற்காக இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில், பைக்கில் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மயிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது ரமேஷ் உட்பட 3 பேர் பஸ்சை மோதுவது போல் வந்து டிரைவரை தாக்கி விட்டு, ஓடி விட்டதாக தெரிவி த்தனர். இதனையடுத்து ரமேஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.

    மதுரை

    உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.

    சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.

    கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு, சொந்தவேலையாக காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சந்தைதிடலருகே மோட்டார் சைக்களில் சென்று போது மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து பிரகாஷ், காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திருட்டுப் போன பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து, காரைக்கால் நகர் பகுதியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அத்திக்கு ரகுமான் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
    • காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி  அருகே ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் அய்யனார்,அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறுஏற்பட்டது.ஜெயகாந்தன் மற்றும் அவரது மகன்கள் திருவேந்திரன் (30) டிரைவர்,கொளஞ்சியப்பன் (32),ஆகியோர், அய்யனார் மனைவி நாகம்மாள் (50)என்பவரை அசிங்கமாக திட்டி இரும்பு கம்மி, தடியால் தாக்கினார்.

    காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருவேந்திரன் (30)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு சேத்தங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் நா ராய ணமூர்த்தி(வயது57). இவர், தனக்கு சொந்தமான வயல் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச்சேர்ந்த ராஜே ந்திரன்(48) என்பவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரா ஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிலத்தில் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.

    விபரம் அறிந்த நாராயணமூர்த்தி, வயலுக்கு சென்று தட்டி கேட்டபோது, வயலில் கிடந்த குச்சி ஒன்றால் ராஜேந்திரன் நாராய ணமூர்த்தியை தாக்கி யுள்ளார். தொடர்ந்து, ராஜேந்திரனின் அண்ணன் சந்திரசேகரர்(50), அவரது மகன் தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து நாராயணமூர்தியை தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நாராயணமூர்த்தி, திருநள்ளாறு தேனூர் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்ப த்திரியில் சேர்கப்ப ட்டார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யபபட்டனர்.
    • புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் குப்பன் (45) தொழிலாளி. இவரிடம் புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் சதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குப்பனை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சதீஷ், சிலம்பரசன், கோகுல், தமிழ்ச்செல்வன், முருகன் ஆகிய 5 பேர் மீது வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து அதில் கோகுல், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    ×