search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assaulting"

    • ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது21). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்ட 7 பேர் அவரை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தாக்கிய இசக்கிராஜா, உச்சிமாகாளி, பாலாஜி, விக்னேஷ், சுந்தர், இசக்கி, பால்துரை ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் இசக்கிராஜா, உச்சிமாகாளி ஆகிய 2 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று முத்துசாமி திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • அப்போது ஆத்திரத்தில் அங்கே இருந்த மண்வெட்டியால் சுப்பையாவின் தலையில் தாக்கி அடித்து உதைத்துள்ளார்

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகன் முத்துசாமி (வயது38.) திருமணமாகாதவர். இவருடன் பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் தனக்கு திருமணம் முடித்து வைக்க சொல்லி பெற்றோ ரிடம் வற்புறுத்திய உள்ளார்.

    சம்பவத்தன்று அவர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் அங்கே இருந்த மண்வெட்டியால் சுப்பை யாவின் தலையில் தாக்கி அடித்து உதைத்து ள்ளார். இதில் காயமடைந்த சுப்பையா சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்ப ட்டார்.

    இது குறித்து குருவம்மாள் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.

    • குருசாமி நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.
    • இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த போது அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவரை மறித்து பணம் கேட்டனர்.

    தூத்துக்குடி:

    தென்காசி மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்தவர் குருசாமி (வயது 50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.

    இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த ேபாத அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவ ரை மறித்து பணம் கேட்டனர். அவர் மறுக்கவே ஆத்திர மடைந்தவர்கள் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர்.

    இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத்விக்னேஷ் (22), மகராஜா (22) மற்றும் 2 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரத் மற்றும் மகராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு முத்து பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியது பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், விக்கி, முத்து என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர்களை தாக்கிய மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளில் நாகர்கோவில் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் மினி பஸ்களில் வீடுகளுக்கு செல்வது வழக்கம். இதுபோல நேற்று மாலையிலும் ஏராளமான மாணவ- மாணவிகள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர்.

    இதில் சுசீந்திரம் மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த பிளஸ்- 2  மாணவர்கள் 2 பேர் ஒரு மினி பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். பஸ் கோட்டார் அருகே சென்றபோது, மாணவர்களுக்கும், மினி பஸ் கண்டக்டருக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மினி பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் சேர்ந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.

    டிரைவர் - கண்டக்டர் தாக்கியதில் 2 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் கோட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றனி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மினி பஸ் டிரைவர், கண்டக்டர் அபினேஷ், கவுதம்  மற்றும் ஜெனிஸ்டன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை அண்ணா சாலையில் மழைக்கு ஒதுங்கி நின்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த ஜெயபிரசாத் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அங்குள்ள ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்று ஜெயபிரசாத்தை தாக் கிய கும்பல் குறித்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஜெயபிரசாத்தை தாக்கியவர்கள் கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்த சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) மற்றும் பூனை மணி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கவியரசன், சாமிக்கண்ணு, பிரான்சிஸ் ரெமோ ஆகிய 3 பேரை கைது செய்தனர். பூனை மணியை தேடி வருகிறார்கள்.

    பயணிகளை ஏற்றி இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது18). தேனி- பழனிசெட்டிபட்டி வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிசெட்டிபட்டி நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மினி பஸ் நேரம் தவறி பயணிகளை ஏற்றினர். இதனை மாரிச்செல்வம் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதனால் மாரிச்செல்வம் மற்றும் மற்றொரு மினி பஸ் டிரைவர் பாண்டி மற்றும் கண்டக்டர் ராஜேஷ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாரிச்செல்வத்தை தாக்கி மிரட்டி உள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் பாண்டியை கைது செய்தனர்.
    உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பாக ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து உத்தரகாண்டின் ஹரித்வாருக்கு புனித யாத்திரை சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது அவர்களது கையில் இருந்த பணம் தீர்ந்தது.

    எனவே உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணத்துக்காக சிறுசிறு பணிகளை செய்து கொடுத்தனர். அப்போது அந்த குழுவில் இருந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கு ஓட்டல் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் செய்தான். அதன்படி ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

    முசாபர்நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 16 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 22 வயது வாலிபர் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 
    மணவாளக்குறிச்சி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை செதுவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் குளச்சல் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    விக்னேஷ், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தார். அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த மாணவி விக்னேசின் காதலை ஏற்காமல் அவரை புறக்கணித்தார். இதனால் விக்னேஷ், அந்த மாணவியை பின்தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக அந்த மாணவி, தனது தோழியுடன் கருமன்கூடல் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது விக்னேஷ், தன்னுடன் படிக்கும் மாணவர்களான கழுவன்திட்டவிளையைச் சேர்ந்த ஸ்ரீசுதன் (22), ஆரோக்கியபுரம் ராஜசிங் (20) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார்.

    3 பேரும் அந்த மாணவியை கேலி செய்து பேசினர். அந்த மாணவி அவர்களை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த 3 மாணவர்களும், மாணவியிடம் அத்துமீறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும் தங்களுக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது, செத்துப்போ என கூறி மாணவியை அவர்கள் 3 பேரும் தாக்கினர். இதில் அந்த மாணவியின் மார்பில் பலத்த அடிபட்டு கீழே சரிந்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்து அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் மயங்கினார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மயங்கி கிடந்த மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த மாணவி தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் விக்னேஷ், ஸ்ரீசுதன், ராஜசிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் ராஜசிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார். விக்னேஷ், ஸ்ரீசுதன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே மாணவியை தாக்கியபோது அவருடன் நின்ற தோழி, மாணவர்களை தடுக்க முயன்றார். அப்போது தோழியையும் மாணவர்கள் தாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தோழியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    ஜேடர்பாளையம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவரது மனைவி நித்யா (30). இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மோகனூக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(39) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. 

    அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை மீண்டும் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரவி (40) ஆகியோர் சேர்ந்து மோகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து மோகன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நாமக்கல் கிளை ஜெயிலில் அடைத்தார்.
    வில்லியனூரில் சொத்து பத்திரம் தொடர்பாக மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமணி (வயது 54). இவரது மனைவி சசிகலா (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன் - மனவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டின் கீழ் தளத்தில் ராஜமணியும், வீட்டின் மாடியில் சசிகலா தனது மகள்- மகளுடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ராஜமணி சொத்து பத்திரம் தொடர்பாக வீட்டின் மாடிக்கு சென்று சசிகலாவிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ராஜமணி சசிகலாவை சரமாரியாக தாக்கினார்.

    இது குறித்து சசிகலா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜமணியை கைது செய்தனர்.

    ×