என் மலர்
நீங்கள் தேடியது "ATM Robbery"
- ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
- 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் :
வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போதையில் அட்டூழியம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி பழைய பஸ் நிலை யம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணிவெற்றிலை காரர் தெருவை சேர்ந்த பால குமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி. எம். மையத்தின் பொறுப் பாளராக கவனித்து வருகிறார்.
இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார்.
அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன டியாக கண்காணிப்பு கேம ராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பாலகுமரன் புகார்கொடுத்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேம ராவில் உள்ள உருவங்களை போலீசார் தொடர்ந்து விசா ரணை செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நக ராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவண்ணாமலை:
சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர்.
பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினர். இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது.
கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் 'இண்டியா ஒண்' வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.
இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.
கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'இண்டியா ஒன்' ஏ.டி.எம். ஆகும்.
இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
- கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் திவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும் அதே போல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையிலும், வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுரோடு பகுதியில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பேரணாம்பட்டு பத்திரபல்லி, பனமடங்கி, சேர்க்காடு, சோதனை சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
- கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு கூறியிருப்பதாவது:
* திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
* மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும்.
* அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும்.
* கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
* திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன.
- ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72 லட்சம் பணம் கொள்ளை போனது.
நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.
ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.
அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.
கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.
இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று 2-வது நாளாக லாட்ஜிகளில் சோதனை நடத்தப்பட்டது.
இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை போளூர் கலசப்பாக்கம் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
நாகர்கோவில்:
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா ?போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் கைதேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
- 9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏ.டி.எம். கொள்ளையில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.
கைதேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 4 ஏ.டி.எம்.களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை திருட்டு கும்பல் அரங்கேற்றியுள்ளது.
குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம்.களை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மும்பையில் பெறப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
- தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4 ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
- ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த அறிவுரைகள் பின்வருமாறு:-
* அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.
* ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.
* இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, "மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படாது. எனவே இந்த 3 அறிவுரைகளையும் உடனடியாக செயல்படுத்த வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
- போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
- கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.
திருப்பத்தூர்:
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து வடமாநில கும்பல் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் கொரட்டியில் மர்ம கார் ஒன்று சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.
ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடிவரும் நிலையில் மர்ம கார் சிக்கியுள்ளதால் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய கும்பல் வந்த காரா? என்ற கோணத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கேரள வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
''கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.
வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலை பகுதிகளிலும், மாவட்டத்தின் புறவழிச்சாலை பகுதிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர்.
ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று கர்நாடக மாநிலத்தில் நிரந்தரமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தனர்.
திருவண்ணாமலை நகரப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டனர். பின்னர் கொள்ளையடிக்க கூடிய ஏடிஎம் மையங்களை அவர்கள் தேர்வு செய்தனர்.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக பணத்தை கொள்ளையடித்து விட்டு எந்த வழியாக செல்வது என ஆய்வு செய்தனர். சுங்கச்சாவடி இல்லாத பாதை எது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகள் எது என்பதை நன்கு கண்டறிந்து துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி உள்ளனர்.
ஓரிரு நாட்களில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.