search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted murder"

    • ராஜேஸ்வரியின் 2-வது மகளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது.
    • பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம். இவரது வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கமலம் வீட்டின் மொட்டை மாடியில் உலர வைக்கப்பட்டிருந்த மணிலாவை, ராஜேஸ்வரியின் 2-வது மக–ளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த கமலம் அவரது மகன், மகள் ஆகியோர் மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மீனா பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக கமலம் உள்ளிட்ட 3 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்–தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கமலம் உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம், ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் சமரசம் பேசி குறிப்பிட்ட அளவு பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே ராஜேஸ்வரியின் குடும்பத்தால் தனக்கு ஆபத்து உள்ளது என்று கமலம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கமலம் வீட்டின் அருகில் தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜேஸ்வரியின் உறவினர்களான பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்கதை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்–களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்–றனர். உடனே பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீ–சா–ரிடம் காட்டி, எங்–களை பிடிக்க முயற்சி செய்–தால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், தப்பிச் சென்ற 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • தம்பதியை அரிவாளால் தொழிலாளி வெட்டியுள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் 3-வது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 49). இவரது மனைவி அமுதவள்ளி (42). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூப்பனார் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த அமுதவள்ளியின் மீது, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் மது போதையில் கல்லை எடுத்து வீசியுள்ளார்.இதனை தட்டி கேட்ட அமுதவள்ளியையும், அவரது கணவர் பிச்சை பிள்ளையும் கண்ணன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளை எடுத்து வந்து பிச்சை பிள்ளையையும், அமுதவள்ளியையும் வெட்டியுள்ளார். இதில் இடது கையில் வெட்டு காயமடைந்த பிச்சைபிள்ளை, அமுதவள்ளி ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் பொதுமக்கள் கண்ணனை பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணனுக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் போலீசார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கடந்த 15 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகனை விட்டு பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மேலும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையானார். மது போதையில் அவர் அடிக்கடி ஊர்க்காரர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • இளம்பெண் பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்
    • போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19) என்பதும், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அந்தப் பெண் லோகேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்தபோது காதலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் லோகேஷை தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Ariyalur News : Attempt to kill the driver

    அரியலூர் :தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் மகன் ஆனந்த்(வயது 38). இவர் சொந்தமாக கழிவு நீர் ஊர்தி வைத்து வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை அகற்றும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் அம்மாசத்தித்திலிருந்து தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்று கொண்டிருந்தபோது அத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் சிலர் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை தடுத்து லிப்ட் கேட்டுள்ளனர். காலை நேரத்தில் யாரோ லிப்ட் கேட்கிறார்களே என்று ஆனந்த் வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பெரிய வாளை எடுத்து ஓங்கி டிரைவர் ஆனந்த் தலையில் வெட்ட வந்துள்ளனர். அதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஆனந்த் லாவகமாக தலையை நகர்த்திக் கொண்டார். இதில் அவரது விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அவருக்கு விலா பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு அதற்கு ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஆனந்த் கொடுத்த புகாரில் அவரை வெட்ட வந்தது கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சரவணா நகரை சேர்ந்த சந்திரன் மகன் அசோக் (30) என்று குறிப்பிட்டுள்ளார். அசோக் ஆனந்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அசோக் மற்றும் அவருடன் 3 பேர் சேர்ந்து ஆனந்த் கழிவுநீர் ஊர்தியை ஓட்டி வரும் பாதையில் காத்திருந்து அவரை கொலை செய்ய முயன்றதாக அவரது புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கொலை செய்ய முயன்ற அசோக் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

    • கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
    • மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.

    இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    • நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல கணவன் முயற்சித்தார்.
    • ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி (வயது 42). கடந்த சிலநாட்களாக ஆதிகேசவன் தனது மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலையும் பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் சரோஜினி அலறித்துடித்தவாறு கீழே விழுந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த ஆதிகேசவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சரோஜினி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிந்து ஆதிகேசவனை தேடி வருகிறார்கள்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போதுங்கனி (வயது 59) பணியில் இருந்தார்.
    • நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, மடக்கி பிடித்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் நிலையத்திற்கு சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர அங்கு ஏராளமான ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு சவாரி ஏற்றி செல்கின்றனர். அங்கு பயணிகளை ஏற்றும்போது ஆட்டோ மற்றும் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போதுங்கனி(வயது 59) சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.

    அப்போது அங்கு தச்சநல்லூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்த செல்வக்குமார்(30) என்பவர் வந்தார். ஆட்டோ டிரைவரான செல்வக்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதுங்கனியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து போதுங்கனியை குத்த முயன்றார்.

    அப்போது அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்திப்பு நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் விரைந்து வந்து செல்வக்குமாரை பிடிக்க முயன்றார்.இதனால் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார்.

    ஆனால் காவலர் வேல்முருகன் அவரை விடாமல் துரத்தி சென்றார். த.மு. சாலையில் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, வேல்முருகன் மடக்கி பிடித்து சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றார். 

    • பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்ட நடந்த முயற்சியில் வெட்டுக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    உத்தமபாளையம் :

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ்குமார் (வயது 33). இவர் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பி.டி.ஆர். சாலை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை பின்தொடர்ந்து ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை வழிமறித்து கீழேதள்ளி கத்தி மற்றும் அரிவாளால் தாக்கினர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து உத்தம–பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் 2 பேரும் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சுரேஷ்குமாரை தீர்த்துக் கட்ட வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    பணகுடி அருகே கடையில் பிஸ்கட் வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்ததாக சிறுமி மீது தந்தை மண்எண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி சுஜா (வயது 34).

    இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் சுஜா அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.

    இந்நிலையில் சுஜா நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவர்களது மகளான மகேஸ்வரி (10) என்பவர் அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்ததாக தெரிகிறது.

    இதுதொடர்பாக அந்தோணிராஜிடம் கடை வியாபாரி புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் வீட்டிற்கு சென்று 3 குழந்தைகளிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் 3 குழந்தைகள் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் மகனும், ஒரு மகளும் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் மீது லேசாக தீப்பிடித்து. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

    பின்னர் கடையில் இருந்து வீடு திரும்பிய சுஜா மற்றும் பொதுமக்கள் வீட்டில் தீப்பிடித்த நிலையில் இருந்த மகேஸ்வரியின் உடலில் இருந்த தீயை அணைத்து படுகாயமடைந்த அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தீக்காயம் காரணமாக ஜேசுஅந்தோணி ராஜூம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (32). இவர்களுக்கு திருமணமாகி வைத்திஷினி (12) மற்றும் முகாசினி (7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக மதுபோதையில் வீட்டிற்கு வரும் மாடசாமி, இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாடசாமி இந்திராவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இந்திரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாடசாமி சாப்பிட அமர்ந்துள்ளார்.

    அவரது உணவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை இந்திரா கலந்து வைத்ததாராம். சாப்பிட்டு கொண்டிருந்த மாடசாமிக்கு உணவில் மருந்து வாசம் வருவதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது உணவில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் மாடசாமி மயங்கியுள்ளார்.

    அருகிலிருந்தவர்கள் மாடசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.
    சேலத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கவரிங் வியாபாரி மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).

    கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரையில் வாகன சோதனையின்போது லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர்கள் தினேஷ், மரியஅருண். இவர்கள் நேற்று மாலை மேலூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். உடனே போலீஸ்காரர்கள் லாரியின் முன் பகுதிக்கு சென்று விசாரிக்க முயன்றனர்.

    இதையடுத்து திடீரென்று வேகத்தை அதிகரித்த டிரைவர், போலீஸ்காரர்கள் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் தினேஷ் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த பெரியசாமி (44) என்பவரை கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

    ×