என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Audy Friday"
- போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.
ஆடி மாத வளர்பிறை செவ்வாய்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.
மேலும் இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற உடை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை ) மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.
போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும்.
பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம். இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும்.
படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை நார்ப்பெட்டியில்) வைத்து பின்னர் வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.
கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம். மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது வீட்டை சுத்தம் செய்து விட்டு பெட்டியை திறக்க வேண்டும். பெட்டியை திறந்தவுடன் பூ வாசம் மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை.
அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடை பிடிக்க முடியாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்கிழமை தான் ஏற்ற நாள்.
சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்