search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aval vegetable pulao"

    அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
    வெங்காயம் - 1,
    கெட்டி அவல் - 2 கப்,
    தக்காளி - 2,
    தேங்காய் பால் - அரை கப்,
    கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

    வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×