search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avocado Chutney"

    எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    அவகோடாவில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

    தேவையான பொருட்கள்

    அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
    உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 8
    பூண்டு - 5 பல்
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான அவகோடா துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×