என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby"

    • கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது.
    • குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பொதுவாக எல்லோருக்கும் 2 கைகளிலும் 10 விரல்கள், 2 கால்களிலும் 10 விரல்கள் என 20 விரல்கள் தான் இருக்கும். அரிதாக 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை சில நேரங்களில் காண முடியும். அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 24 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்குள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கோரட்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது. இது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அந்த குழந்தையை தெய்வத்தின் அவதாரம் என்று கூறி வழிபட்டு செல்வதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 24 விரல்களுடன் பிறந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார்.
    • குழந்தை ரியாக்‌ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக சட்டங்களை கடுமையாக்கி வரும் அரசுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றன.

    இந்நிலையில் சுமார் 3 வயது பெண் குழந்தைக்கு நல்ல விதமாக தொடுவது மற்றும் தவறான முறையில் தொடுவது குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்றுக் கொடுத்ததும் குழந்தையின் தாயார் அக்குழந்தையின் உடலில் தொடுகிறார். அதற்கேற்ப அந்த குழந்தை ரியாக்ஷன் செய்வது போன்ற காட்சிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த குழந்தையின் பெற்றோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

    • ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம்.
    • தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.

    சென்னை:

    உலக நர்சுகள் தினம் இன்று. நோயாளிகளின் வளர்ப்பு தாய் போல் செயல்படும் இவர்களது பணி மகத்தானது.

    அதிலும் பிறந்த குழந்தைகளை பெற்ற தாய் போல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது சாதாரண விஷயமல்ல. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் பணிபுரியும் ஒவ்வொரு நர்சும் அந்த குழந்தைகளின் மற்றொரு தாய் போன்றவர்கள்தான்.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் நர்சு சாந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த நர்சுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வார்டு அனுபவம் பற்றி சாந்தி கூறியதாவது:-

    இந்த வார்டில் பணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனுமதிக்கப் பட்டிருக்கும் அத்தனை குழந்தைகளும் அப்போது பிறந்தவைகள்.

    அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆக்சிஜன் பிரச்சினை வரலாம். உடனே அட்டன்ட் பண்ண வேண்டும். சில நிமிடங்கள் தாமதித்தாலும் ஆபத்து நேரிடலாம்.

    ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம். எனவே, எந்த நேரமும் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் குழந்தைகளின் அருகில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    ஆக்சிஜன் வைத்திருக்கும் முக மூடியை கவனித்தல், வென்டிலேட்டர் பராமரிப்பு நரம்பு வழியாக மருந்து செலுத்துதல் ஆகியவை முக்கியம். அதுமட்டுமல்ல இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நரம்பு வழியாகவோ வாய் வழியாகவோ உணவு வழங்க வேண்டும். தாய்ப்பால் வழங்குவதாக இருந்தால் தாயிடம் குழந்தையை கொடுத்து பாலூட்ட வைக்க வேண்டும்.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.

    கொரோனா காலத்தில் தாய்ப்பால் வங்கிக்கும் பால் கிடைக்காமல் சிரமப் பட்டோம். அந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருந்தது.

    குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் பராமரித்து ஆரோக்கியத்துடன் தாயிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பும் போதுதான் மகிழ்ச்சியும், நிம்மதியும் வரும் என்றார்.

    • வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
    • கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் (வயது38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா(30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(5), தேஜாஸ்ரீ(2), மற்றும் 4 மாத ஆண் கைக்குழந்தை இருந்தது.

    ரத்னா தனது கடைசி மகன் பிரசவத்தையொட்டி 2 மகள்களுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவருடன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

     காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்பு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிறுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாயின் அன்புடன் இதனை ஒப்பிடமுடியுமா? சில சமயங்களில் தொழில்நுட்பத்தை உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    • வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர்களின் ஆர்.பி.ஜி. சேர்மன் ஹர்ஸ் கோயங்காவும் ஒருவர். அவரது டுவிட்டர் பதிவுகள் அடிக்கடி வைரலாகும். அவர் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், எலக்ட்ரானிக் தொட்டிலில் குழந்தை ஒன்று ஆடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. தொட்டிலின் அருகில் மனிதர்கள் யாரும் இல்லை. குழந்தையை தூங்க வைக்க அல்லது அமைதியாக இருக்க அந்த எலக்ட்ரானிக் தொட்டில் தானாக அசைகிறது.

    இந்த வீடியோவை பகிர்ந்த கோயங்கா, தாயின் அன்புடன் இதனை ஒப்பிடமுடியுமா? சில சமயங்களில் தொழில்நுட்பத்தை உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இணையத்தில் விவாதத்தையும் தூண்டி உள்ளது. ஒரு குழந்தையை வளர்க்கும் போது மனித தொடுதல் (குறிப்பாக தாயின்) மிகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன் என ஒரு பயனர் கூறி உள்ளார். ஆனால் மற்றொரு பயனர், நான் இந்த தொட்டிலை விரும்புகிறேன். தாய்மார்கள் சோர்வடைவதை தடுக்க இரவில் இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார்.

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீபிதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டீ, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன.

    நிறைமாத கர்ப்பிணியான சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    சபானாவுக்கு டாக்டர் சில்பா சவுத்ரி தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். இதில் 5.2 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

    தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • குரங்கு செய்யும் நடவடிக்கைகள் பயனர்களை வியக்க வைக்கிறது.
    • பெண்ணுக்கு குரங்கு தேவையான பல உதவிகளை செய்கிறது.

    சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியானாலும் அதில் சில வீடியோக்கள் தான் சிரிக்க வைக்கிறது. விலங்குகள் தொடர்பான சில வீடியோக்கள் பயனர்களை ரசிக்க செய்கிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குரங்கு செய்யும் நடவடிக்கைகள் பயனர்களை வியக்க வைக்கிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது குழந்தையை குளிப்பாட்டி தூங்க வைக்கிறார்.

    அந்த பெண்ணுக்கு குரங்கு தேவையான பல உதவிகளை செய்கிறது. அதாவது குழந்தையை குளிப்பாட்டுவதற்காக தண்ணீர் எடுத்து கொடுப்பது, தூங்க வைக்க உதவுவது என குரங்கின் செயல்களை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்து வருவதோடு, தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

    • குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி கையில் தூக்கிக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
    • படுகாயமடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்.

    பேராவூரணி அருகே கொன்றைக்காடு மேற்கு பகுதியைச் சேர்ந்த கரிகாலன்- ராதிகா.

    இவர்களின் மகள் அஸ்மிதா (3).

    குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி ராஜம்மாள் கையில் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டி கடைக்கு சென்றபோது திடீரென அவ்வழியாகச் சென்ற வெறி நாய் பாட்டியின் காலில் கடித்தது.

    இதனால் நிலை தடுமாறிய ராஜம்மாள் கீழே விழுந்ததில் குழந்தை அஸ்மிதாவின் கையில் வெறிநாய் பலமாக கடித்தது.

    இவர்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடி வந்த திருப்பதி என்பவரையும் நாய் கடித்து விட்டு ஓடியது.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தை அஸ்மிதா, ராஜம்மாள், திருப்பதி ஆகியோரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு படுகாயமடைந்த குழந்தை அஸ்மிதாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டு ப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மரியபெர்லின் பிரின்சியா (வயது26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் பிரின்சியா கர்ப்பம் அடைந்தார்.

    கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த அன்றே ஒரு குழந்தை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.

    இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பிரின்சியா தாய்ப்பால் கொடுத்தார். குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவித்திருந்தார்.
    • 2-வது பிரசவத்துக்காக பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோ ட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பிரசவம் நடை பெறாததாலும் பொதுமக்க ளுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா கவும் அங்கே மருத்துவராக பணிபு ரியும் மணவழகன் இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவி ப்பதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கனாவூர் மேலதெருவை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமித்ரா (வயது 23) இரண்டாவது பிரசவத்துக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இரவு நேரத்திலும் பெண் மருத்துவர் பூர்வி சிகிச்சை அளித்தார்.

    அவருக்கு உறுதுணையாக செவிலியர்கள் வினோதா, கலா, சூசைஅந்தோனி, ஆயா செல்வி இருந்தனர்.

    சுகப்பிரசவம் செய்ததில் சுமித்ராவுக்கு பென் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து டாக்டர் மணவழகன் ஏற்கனவே கூறியது போல பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோ மூலமாக அணிவித்தார்.

    ×