search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BahujanSamaj"

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜுக்கு எதிராக 7 தொகுதிகளில் போட்டி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், காங்கிரசுடன் எவ்வித தொடர்பும் இல்லை என மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். #Samajwadi #BahujanSamajParty #Congress #BJP #Mayawati
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    காங்கிரசை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் எதிர்த்து போட்டியிட மாட்டோம் என்று அகிலேஷ்-மாயாவதி இருவரும் அறிவித்தனர். அதன்படி அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்தும், ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்தும் அவர்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.



    இந்நிலையில் அகிலேசுக்கும், மாயாவதிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக, நேற்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட முழு சுதந்திரம் உள்ளது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணியே பாஜகவை வீழ்த்த போதுமானது. எங்கள் கூட்டணிக்காக உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம் என வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.  #Samajwadi #BahujanSamajParty #Congress #BJP #Mayawati
    ×