என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bail petition filed
நீங்கள் தேடியது "Bail Petition Filed"
சென்னை அயனாவரம் சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதானவர்களில் 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை:
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் 17 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வருகிற 10-ந் தேதி வரை அவர்களது நீதிமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில், கைதான முருகேஷ், ஜெய்கணேஷ், சூர்யா, ஜெயராமன், ராஜசேகர் ஆகியோர் ஜாமீன் கோரி மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘கற்பழிப்பு சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை’ என்று கூறி உள்ளனர். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct

×

X