search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bajaj Avenger 160 Street"

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
     


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. பழைய 180 சிசி அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் ரூ.6000 வரை விலை அதிகம் ஆகும். மேலும் இந்த மோட்டார்சைக்கிள் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்படவில்லை.

    புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள்: எபோனி பிளாக் மற்றும் ஸ்பைசி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் பலசர் 160 என்.எஸ். மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சற்று வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.



    பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.  என்ஜின் மாற்றம் தவிர அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பிரேக்கிங்கை பொருத்தவரை அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் முன்புறம் 260 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130 எம்.எம். டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.
    ×