search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bajaj Discover 110"

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BajajDiscover110 #Motorcycle



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி கொண்ட டிஸ்கவர் 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.52,273 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 01, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதியும், 125சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் பஜாஜ் தனது வாகனங்களில் ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் பஜாஜ் பிளாட்டினா மாடலில் முதல்முறையாக சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டது. பிளாட்டினாவை தொடர்ந்து டிஸ்கவர் 110 மாடலில் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருக்கிறது.



    கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இருசக்கர வாகனங்களில் பிரேக் பயன்படுத்தும் போது இருசக்கரங்களுக்கும் சம-அளவு பிரேக்கிங் அழுத்தம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும். புதிய பிரேக்கிங் வசதி தவிர டிஸ்கவர் 110 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டிஸ்கவர் 110 சி.பி.எஸ். வேரியண்ட் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 115.45சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.81 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் ஹீரோ பேஷன் 110, டி.வி.எஸ். விக்டர் 110 மற்றும் ஹோன்டா சிடி110 டிரீம் டி.எல்.எக்ஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    ×