search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "balakumaran"

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். #Kamalhaasan #BalaKumaran
    சென்னை:

    தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15-ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த உள்ளிடோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, வெளியூரில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்ததால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனால் பாலகுமாரன் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க இயலவில்லை.

    இதனை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள கமலஹாசன் இன்று கமலஹாசன் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரிடம் அவர் ஆறுதல் தெரிவித்தார். 
    மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் சிவகுமார், பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். #Balakumaran #Sivakumar
    இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகுமாரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,

    பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. 

    பாலகுமாரன் எழுத்துக்களுக்கு பிரபல பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.

     

    பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன். சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.
    மிகப்பெரிய எழுத்தாளர் பாலகுமாரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Balakumaran
    சென்னை:

    இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,

    என் மிக நெருங்கிய நண்பர் பாலகுமாரன். அவர் மிகப்பெரிய எழுத்தாளர், பாட்ஷா படத்தில் வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தின் வெற்றி பிறகு வேறு படத்தில் பாலகுமாரனை வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது, இலக்கியமும், ஆன்மிகமும் எனது உலகம் என்று அவர் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Balakumaran #RIPBalakumaran
    ×