என் மலர்
நீங்கள் தேடியது "ban"
- 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
- இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.
இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.


- மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
- அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.
நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.
ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.
லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.
மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
- 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது.
2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
- கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல் வழங்கி உள்ளார்.
- காரம் மற்றும் சுவை காரணமாக நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
- பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது.
கோபன்ஹேகன்:
தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது. காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும். இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.
- தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
- 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.
சென்னை:
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
- நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
- இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
மும்பை:
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.
இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
- அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகனப் பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணையில், "தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று மனுதாரர்கள் வாதம் முன்வைத்தனர்.
இதனையடுத்து, "தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது" என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
- கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம்.
தமிழகத்தில் கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்தியதற்காக தமிழகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரி மீதான விவாதத்தை நிறைவு செய்த அமைச்சர், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
- வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்ப் ]2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக டொனால்டு டிரம்பின் எக்ஸ் [டிவிட்டர்] மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.
- அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.
சென்னை:
பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் 4-ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல்நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது.
அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் (கல்லூரி கேண்டீன்களில்) ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை விற்கக்கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட உதவி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
- 4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
- மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும் ஆழ்கடலில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடலோர பகுதியில் சூறை காற்று வீசுவதால் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். வானிலை மையம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தொடர்ந்து 4 நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்களின் இயல்பான பணி முடங்கியது. புயல் சின்னம் நீங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? என ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.