search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh lowest Test"

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 112 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஒரு பந்தில் மோசமான சாதனையில் இருந்து தப்பியது வங்காள தேசம். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் சுருண்டு மோசமான சாதனையை பதிவு செய்தது.

    அதோடு மட்டுமல்லாமல் வங்காள தேச பேட்ஸ்மேன்களால் 18.4 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடிக்க முடிந்தது. முதல் இன்னிங்சில் 112 பந்துகள் மட்டுமே சந்தித்ததால், ஒரு பந்தில் வித்தியாசத்தில் முதல் இன்னிங்சில் மிகவும் குறைவான பந்துகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையில் முதல் இடத்தில் இருந்தது தப்பியது.



    2015-ல் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 60 ரன்னில் சுருண்டது. அப்போது 18.3 ஓவர்களே தாக்குப்பிடித்தது. இதன்மூலம் 111 பந்துகளை சந்தித்து முதல் இன்னிங்சில் மிகவும் குறைவான பந்தில் ஆல்அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்திருந்தது. தற்போது வங்காள தேசம் ஒரு பந்து வித்தியாசத்தில் மோசமான சாதனையில் இருந்து தப்பியுள்ளது.
    ×