search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bangladesh third match"

    டாக்காவில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வங்காள தேசத்தை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லெவிஸ், ஷாய் ஹோப் இறங்கினர்.

    இதில் லெவிஸ் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவருக்கு ஷாய் ஹோ சிறிது ஒத்துழைப்பு கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். நிகோலஸ் பூரன் 29 ரன்னில் அவுட்டானார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    வங்காள தேசம் சார்பில் ஷாகிப் அக் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான், மொகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியில் லித்தன் தாஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி வங்காள தேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காள தேசம் அணி 17 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பவுல் 5 விக்கெட்டும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    ×