search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baniyan Profession"

    • பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வேண்டும்.
    • சொத்துவரி, குடிநீர் வரியை குறைக்க வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மங்கலம் நகரம் சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் உள்ள மர்ஹீம் ராஜாக்கண்ணு காஜாமுஹைதீன் நினைவுத்திடலில் மாபெரும் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. மக்கள் சங்கமம் மாநாடு துவக்க நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முஹம்மது ரபீக் கொடியேற்றி வைத்தார் .

    வரலாற்று கண்காட்சியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மண்டல தலைவர் உசேன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு மங்கலம் ஆர்.பி.நகர் பகுதியில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜாஉசேன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாரிஸ்பாபு, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர்அகமது கான், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர்அகமது, ஏ.ஐ.ஐ.எம்.சி-திருப்பூர் மாவட்ட தலைவர் அப்பாஸ் நூரி, பல்லடம் தொகுதி தலைவர் யாசர்அரபாத், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி தலைவர் கத்தீஜா அப்பாஸ், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மங்கலம் பகுதி செயலாளர் குர்ஷித் நௌசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டிற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான் துவக்கவுரை ஆற்றினார். மாநில செயலாளர் நாகூர் மீரான், திருப்பூர் மாவட்ட தலைவர் ஜன்னத்இப்ராகிம், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் ஆசியா மர்யம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இறுதியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மங்கலம் நகர செயற்குழு உறுப்பினர் நௌசாத்அலி நன்றி கூறினார்.

    மக்கள் சங்கமம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்,தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உயர்த்தியுள்ள சொத்துவரி ,குடிநீர் வரியை குறைக்க வேண்டும், மின் மீட்டருக்கு வாடகை வசூலிக்க கூடிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. திருப்பூர் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பனியன் தொழிலை பாதுகாக்க பனியன் தொழில்சார்ந்த பயிற்சி நிறுவனம் அமைக்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை சீர்செய்து பாதுகாக்க முடியும்.மேலும் நூல் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு தமிழக அரசு பஞ்சு நூல் கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வு, வரிகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×