search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank cannot"

    வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. #KeralaHighCourt #BankAccount
    கொச்சி:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, வாடிக்கையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், அம்மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாடிக்கையாளருக்கு வங்கி சேவை அளிக்கிறது. எனவே, அவரது நலன்களை பாதுகாப்பது வங்கியின் கடமை. அவரது கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும். வங்கிகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. வங்கிகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி உஷார்படுத்தினாலும், அதை வைத்து தப்பித்துக்கொள்ள முடியாது.

    இவ்வாறு நீதிபதி கூறினார். #KeralaHighCourt #BankAccount 
    ×