search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank of baroda"

    விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அரசின் முடிவுக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger
    புதுடெல்லி:

    விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனினும், இந்த இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.



    இந்த இணைப்பின் மூலம் இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger 
    பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் ஒன்றாக இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாற உள்ளது. #BankofBaroda #DenaBank #VijayaBank
    புதுடெல்லி:

    நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், மேற்கண்ட மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். விரைவில் மத்திய அரசு இந்த இணைப்புக்கான ஒப்புதலை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
    ×