என் மலர்
நீங்கள் தேடியது "banned"
- திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
- பொதுமக்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய கடைசி கட்ட போரை மையமாக கொண்டு ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் "போர்க் களத்தில் ஒரு பூ" என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு உருவான இந்த படத்திற்கு மத்திய சினிமா தணிக்கை குழு தடை விதித்து உத்தர விட்டது.
இந்த சினிமாவில் பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்ப தாகவும், அதன் காரணமாக திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு உள்ள தாகவும் விளக்கம் அளித்தி ருந்தது. இருந்தபோதிலும் இந்த படத்தை திரையிடுவ தற்கான முயற்சிகளை தயாரிப்பாளர் கணேசன் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
பல்வேறு தடைகளை தாண்டி போர்க்களத்தில் ஒரு பூ படத்தை 2025-ல் வெளியிடலாம் என்று கூறி மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து ராஜபாளையம் பாலாஜி திரையரங்கில் இன்று அந்த படம் வெளியாக இருந்தது. இதையொட்டி படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ம.தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மீண்டும் அந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் தமிழக அரசுக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் படம் வெளியாக இருந்த ராஜபாளையம் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வி, அசோக்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் படம் வெளியாக இருந்த திரையரங்கம் முன்பு குவிக்கப்பட்டனர்.
தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக படம் திரையிடுவதை தவிர்த்தனர். இருந்த போதிலும் திரையரங்கம் முன்பு திரண்டிருந்தவர்கள் படத்தை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து எடுத்துக்கூறி அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- 3 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவு அமைந்துள்ளது. அங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.
இது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
- விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
திருப்பூர் :
பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
- மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது.
- முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்., ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருகன் தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்தியாவிலும், தமிழகத்திலும், பல்வேறு மாவட்டங்களில்2, 3 நாட்களாக மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில்கடந்த 2 தினங்களுக்கு முன்பாக, சென்னை, ராமநாதபுரம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில், ஒரு அமைப்பு தொடர்புடைய அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே சமூக விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் சார்பாக இன்றுஉச்சிநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்மற்றும் ஜனாதிபதிக்கும் மறுபடியும் ஒரு புகார் மனுவை அனுப்பிஉள்ளோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- கீழக்கரை நகருக்குள் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி க்குட்பட்ட கீழக்கரை முக்கு ரோடு முதல் கடற்கரை வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்த னர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணை யாளர் செல்வராஜ், பொறி யாளர் மீரான்அலி, துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாளை (29-ந்தேதி) முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும். சீதக்காதி சாலையில் ஒருபுறம் மட்டுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.
- விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
- விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். எஸ்.பி., சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிேஷார்குமார், மாநில செயலாளர்கள் சேவுகன், சண்முகம், கோட்ட செயலாளர்கள் மோகன சுந்தரம், கோவிந்தராஜ் மற்றும் இதர இந்து அமைப்பினர் பங்கேற்று பேசினர்.
விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். விசர்ஜன ஊர்வல நாளில் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். வழக்கமான பாதைகளில் ஊர்வலம் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால் ரோடு உயரமாகியுள்ளது. சில இடங்களில், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் நீர்நிலைகளில், சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இயற்கை நீர்நிலைகளுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் வினீத் பேசுகையில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய மாநகர போலீசில் உதவி கமிஷனரிடமும், மற்ற பகுதிகளில் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' ரசாயன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்ட பந்தல், பக்கவாட்டு தடுப்பு அமைக்க கூடாது. சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
- நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.
- சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் ஏராளமானோர் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.
இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று குளித்து மகிழ்வார்கள். தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் காரையாறு பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் ஏராளமானோர் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த 2 இடங்களுக்கும் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அடிக்கடி மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு வரை சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது.
- கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் கடந்த மாதம் நடந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் 6 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவைகளை அள்ளுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல், மணல் உள்ளிட்டவை கிடைக்காததால் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 2 மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தான் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
இந்த வேலையை நம்பி மகளிர் சுயஉதவிக்குழு, வீட்டின் அன்றாட செலவுகள், குழந்தைகளின் பள்ளி படிப்புச்செலவு உள்ளிட்டவை இருப்பதாகவும், சுமார் ஒரு மாதமாக வேலை இல்லை எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
நெல்லையில் உள்ள 55 குவாரிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் லாரிகள், பொக்லைன் ஓட்டுதல், வெடிமருந்து வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தடையால் குடும்ப செலவுக்கு தவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து குவாரிகளை ஆய்வு செய்து முடிக்க வேண்டும். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக கல்குவாரிகளில் இருந்து கல், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.
இந்த போட்டியில் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த பெடரேஷன், ஆசிய தடகளம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அந்த போட்டியில் நடத்தப்பட்ட சோதனையிலும் முதல் போட்டியில் பயன்படுத்திய ஊக்க மருந்தின் தாக்கம் மன்பிரீத் கவுரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அரியானாவை சேர்ந்த 29 வயதான மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்த காலகட்டத்தில் மன்பிரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியது வரும் என்று தெரிகிறது. #ManpreetKaur #CbampionShotPutter
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அவர் தனது மனுவில், “இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்துகளான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரெயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலையோரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பதில் மனு மற்றும் மனுதாரரின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இயற்கை வளங்களான மலைகள், காடுகள் மற்றும் சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #LSPolls #BanOnBanners
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.
ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.