என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Batadrava Satra Temple"
- அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு.
- அசாம் மாநிலத்தில் ஏற்கனவே ராகுல் நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 25-ந்தேதி வரை அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாம் துறவியும், அறிஞருமான ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் அமைந்துள்ள படத்ராவா சத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்தி இன்று காலை சென்றார்.
அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், "நாங்கள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றோம். என்னால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நாங்கள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. எளிமையான முறையில் பிரார்த்தனை செய்ய விரும்பினோம்" என்றார். அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா "ராகுல் காந்தி இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பக்கம் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை, மறுபக்கம் ராகுல் காந்தி ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் சாமி தரிசனம் என்பது மோதலை ஏற்படுத்தும். இது அசாமிற்கு நல்லதல்ல" எனக் கூறியிருந்தார்.
கோவில் நிர்வாகம் மதியம் 2 மணிக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என கேட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக, அம்மாநில முதல்வர் மீது காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இது தொடர்பாக போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.