search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI CEO Rahul Johri"

    பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீதான செக்ஸ் குற்றச்சாட்டு பொய்காக ஜோடிக்கப்பட்டது, அவர் மீண்டும் பணி செய்யலாம் என விசாரணைக்குழு அறிவித்துள்ளது. #RahulJohri #MeToo
    வேலை பார்க்கும் இடங்களிலும், பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வந்தனர். சர்வதேச அளவில் ‘மிடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த மாதம் இப்படிப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

    பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியான ராகுல் ஜோரி அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். ராகுல் ஜோரியும், அவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டை ராகுல் ஜோரி மறுத்திருந்தார்.

    இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ராகேஷ் சர்மா தலைமையிலான மூன்று பெண்கள் கொண்ட விசாரணைக்குழு கடந்த மாதம் 25-ந்தேதி அமைக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு அறிவித்தது.

    மூன்று பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் ஷர்மா (தலைவர்), முன்னாள் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி பர்க்கா சிங், வழக்கறிஞரும், ஆர்வலரும் ஆன வீணா கவுடா ஆகிய மூன்று பேர் இடம்பிடித்திருந்தனர்.



    இந்த குழு இன்ற நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம் அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையை வினோத் ராய் வெளியிட்டார். அதில் இருவர், தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட புகார், அவர் பணியை தொடர்ந்து தொடரலாம் என்று தெரிவித்திருந்தனர்.

    அதுவேளையில் வீணா கவுடா மட்டும், பாலின உணர்திறன் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் ஜோரி மீது வழக்கு தொடர வேண்டும் என்பது குறித்தான கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் ராகுல் ஜோரி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. #BCCI #RahulJohri
    உள்ளூர் போட்டிகள் அதிக அளவில் நடக்க இருப்பதால் சிறப்பு ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மாநிலங்கள் மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்தி மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை என்பதை பிசிசிஐ அமல்படுத்த இருக்கிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி பெற்றுள்ளது. அதேபோல் பீகார் மாநில சங்கத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.



    இந்த மாநிலத்தில் சர்வதேச தரத்திற்கான மைதானங்களும், ஆடுகளங்களும் கிடையாது. இதனால் கூடுதலாக ஆடுகள பராமரிப்பாளர் பதவியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இவர்கள் நடுநிலையான ஆடுகளத்தை தயார் செய்வதற்கு உதவிகரமாக இருப்பார்கள்.
    ×