search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beela IAS"

    • ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி பீலா ஐ.ஏ.எஸ். மனுதாக்கல் செய்துள்ளார்.
    • தற்போது விவாகரத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீலா ஐ.ஏ.எஸ். கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது பீலா ஐ.ஏ.எஸ். புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராஜேஷ் தாஸ் பீலாவின் கணவர் ஆவார். ஏற்கனவே ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு பீலா ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக,

    கடந்த 2021-ம் ஆண்டு காவல்துறை பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது.

    அதனைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதனால் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரி இருந்தார். ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×