search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengalore Traffice police"

    இணையதள விளையாட்டில் ஈடுபட்டு சாலையில் ‘கிகி’ நடனம் ஆடினால் ஜெயிலுக்குள் தள்ளுவோம் என்று பெங்களூரு போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். #KiKi #KiKiDance #KikiChallenge
    பெங்களூரு:

    கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் பாடியுள்ள ‘கிகி டூ யூ லவ் மி’ என்ற பாடலுக்கு ஆபத்தான நிலையில் நின்று கொண்டு நடனம் ஆடி இணைய தளத்தில் பதிவு செய்யும் சவால்களை பலர் செய்து வருகின்றனர்.

    இதை ‘கிகி’ நடன சவால் என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் இதே போல் பலர் நடனம் ஆடி இணைய தளத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலும் நடிகைகள், பிரபலங்கள் என பலரும் இவ்வாறு செய்கின்றனர். இது, இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    இதனால் இளம்பெண்கள், இளைஞர்கள் இந்த நடனத்தை ஆடுகின்றனர். குறிப்பாக ஓடும் காரில் இருந்து இறங்கி திடீரென நடனம் ஆடுவது, சாலையின் நடுவில் நின்று நடனம் ஆடுவது என்று ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர்.

    பெங்களூருவிலும் இது போன்ற நடனங்களில் இளைஞர்கள் அடிக்கடி ஈடுபடுகிறார்கள்.

    எனவே, பெங்களூரு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதில், “சாலைகளில் நின்று ‘கிகி’ நடனம் ஆடுவதால் உங்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். எனவே, இது சாலை விதிகளுக்கு மாறானது.

    சாலை விதி மீறல் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி, சாலைகளில் அவர்கள் நடனம் ஆடினால் அவர்களை ஜெயிலில் தள்ளுவோம். அவர்கள் ஜெயிலில் சுதந்திரமாக நடனம் ஆட வசதிகளை ஏற்படுத்தி தருவோம்” என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். #KiKi #KiKiDance #KikiChallenge
    ×